SI பறித்த அரசு இடம்!கலெக்டரிடம் புகார்!

அரசு இலவசமாக வழங்கிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்த குஜிலியம்பாறை காவல்துறை உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அரை நிர்வாணத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த நபர்களால் பரபரப்பு.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நந்தவனப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கென்னடி.
இவர் தனது உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மேல் சட்டையை இல்லாமல் அரை நிர்வணத்துடன் புகார் மனு வழங்குவதற்காக வந்தனர்.அப்போது அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது.

எங்களது தந்தை பொன்னனுக்கு தமிழக அரசு ஆதிதிராவிட நலத்துறையில் இருந்து இலவசமாக வீட்டுமனை வள்ளுவர் காலணியில் கொடுத்தனர்.தொடர்ந்து நாங்கள் அந்த இடத்தை பராமரித்து வந்தோம்.இந்நிலையில் எங்கள் இடத்தின் அருகில் குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணி செய்து வரும் சங்கர் என்பவர், தற்போது இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வேலியும் அமைத்து விட்டார்.இதனால் மனமுடைந்த கென்னடி என்கிற நான், கடந்த எட்டு மாதங்களாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடமும் 45 முறை புகார் மனு வழங்கியுள்ளதாகவும்,புகாரின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என கூறினர்.

மேலும் அதிகாரிகளிடம் கேட்டால் நோட்டீஸ் அனுப்பினால் அவர் வர மறுக்கிறார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.நாங்கள் எங்கள் இடத்துக்குச் சென்றாலே மிரட்டி அங்கிருந்து எங்களை விரட்டி விடுகிறார். ஆகவே தான் நானும் எனது சகோதரர்களும் மேல் சட்டை இல்லாமல் அரை நிர்வாணமாக வந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியிடம் புகார் மனு வழங்கியுள்ளோம்.மேலும் மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.