மாணவிகளிடம் பாலியல் சீண்டல் புகார் எதிரொலி… அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு.!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் பணியாற்றும் 2 ஆசிரியர்கள் மாணவிகளுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஒரு வீடியோ வெளியானது. அதை வெளியிட்ட மாணவியிடம் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த வீடியோ குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியும் புகார் செய்தார்.

இந்த நிலையில் பாலியல் சீண்டல் புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவுடன் சேர்ந்து பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.