மகளுக்கு நீதி கேட்டு தலைமைச் செயலகத்தில் காவலர் போராட்டம்

 மருத்​து​வர்​களின் தவறான சிகிச்​சை​யால் மகளின் பாதம் அகற்​றப்​பட்​ட​தாகக் கூறி, அதற்கு நீதி கேட்டு காவலர் ஒரு​வர் தலை​மைச் செயலக நுழைவு வாயி​லில் திமுக கொடியை எரித்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டார்.

திரு​வள்​ளூர் அடுத்த காக்​களூரை சேர்ந்​தவர் கோதண்​ட​பாணி (44), ஆவடி டேக்ங் பேக்​டரி காவல் நிலை​யத்​தில் தலை​மைக் காவல​ராக பணி​யாற்​றுகிறார். இவருக்கு மனைவி மற்​றும் 2 ஆண் மற்​றும் 13 வயதில் பிர​திக் ஷா என்ற மகள் உள்​ளார்.

பிர​திக் ஷாவுக்கு 3 வயது இருக்​கும்​போது திடீர் உடல் நலக்​குறைவு ஏற்​பட்​டது. இதையடுத்து, அவர் எழும்​பூர் குழந்​தைகள் நல அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். மேல் சிகிச்​சைக்​காக ராஜீவ்​காந்தி அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டார்.அங்கு சிறுமி​யின் காலின் பாதம் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்​டிய சூழல் ஏற்​பட்​டது. மருத்​து​வர்​களின் தவறான சிகிச்​சையே மகளுக்கு கால் பறி​போகக் காரணம் எனக்​கூறி, நீதி கேட்டு 5 ஆண்​டு​களாக தலை​மைக் காவலர் தொடர்ந்து போராடி வரு​கிறார்.

மருத்​து​வத் துறை அலு​வல​கம், டிஜிபி அலு​வல​கம், தலை​மைச் செயல​கம் எனப் பல இடங்​களில் முறை​யிட்​டும் அவரது கோரிக்கை இது​வரை நிறைவேற​வில்​லை. இந்​நிலை​யில், மகளுக்கு நீதி கேட்​டு, சீருடை​யில் தலை​மைச் செயலக நுழைவு வாயிலுக்கு நேற்று வந்த கோதண்​ட​பாணி, திமுக கொடியை எரித்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டார்.

மேலும், 2021-ம் ஆண்டு திமுக ஆட்​சிக் காலத்​தில்​தான் தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்​கப்​பட்​ட​தாகக் கூறிய, மகளுக்கு நீதி கேட்டு கோஷமிட்​டார்.அங்கு பாது​காப்​புப் பணியி​லிருந்த போலீ​ஸார் உடனடி​யாக தீயை அணைத்து கோதண்​ட​பாணியை அங்​கிருந்து அப்​புறப்​படுத்​தினர்.முன்​ன​தாக, தலை​மைக் காவலர் கோதண்​ட​பாணி கூறுகை​யில், “மகள் பிர​திக் ஷாவுக்கு 3 வயது இருக்​கும்​போது சிறுநீர் கழிப்​ப​தில் பிரச்​சினை ஏற்​பட்​டது. இதையடுத்து, எழும்​பூர் குழந்​தைகள் நல அரசு மருத்​து​வ​மனை​யில் காண்​பித்​தேன்.அப்போது, காலில் அரிப்​பும் ஏற்​படத் தொடங்​கியது. இது சாதாரண அரிப்​பு​தான் எனக் கூறி அலட்​சி​ய​மாக சில மருந்​துகளைக் கொடுத்து அனுப்பி வைத்​தனர். பின்​னர், 2 நாளில் மீண்​டும் காலில் அரிப்பு அதி​கரித்​தது.

வலது காலில் ரத்த ஓட்​டம் சரி​யாக இல்லை என கூறினர். இறு​தி​யில் அவர்​கள் அளித்த தவறான சிகிச்​சை​யால் மகளின் கால்​பாதத்தை அகற்​றும் நிலை ஏற்​பட்​டது. எனவே, இதில் சம்​பந்​தப்​பட்ட மருத்​து​வர்​கள் உட்பட அனை​வர் மீதும் நடவடிக்​கை எடுத்​து எனது மகளுக்​கு உரிய நீதி வழங்​க வேண்​டும்​” என்​றார்​.