கோவை மத்திய சிறையில் போக்சோ கைதி திடீர் மரணம்..

நீலகிரி மாவட்டம் ,கூடலூர் பக்கம் புளியம்பாறை காளி கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் ( வயது 70) இவர் 2022 ஆம் ஆண்டு நடந்த போக்சோ வழக்கில் தேவாலா காவல் நிலையத்தால் கைது செய்யப்பட்டு,ஊட்டி மகிளா நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிறையில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார் .இது குறித்து ஜெயிலர் சரவணகுமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.