தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை வெளியிட்டார்.
இந்தாண்டும் மாணவிகள் முதலிடம் பிடித்தனர். மாணவிகள் 96.70 சதவிகிதமும், மாணவர்கள் 93.16 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினா்.
பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், ஒரு நாள் முன்னதாக இன்று வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை காலை முடிவுகளை வெளியிட்டார்.
தேர்வு எழுதியவர்களில் 95.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.56 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு எழுதிய மொத்தப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 7,92,494 பேர்களில் 4,19,316 மாணவிகளும், 3,73,178 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகயளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களில் 3,47,670(93.16%), மாணவிகளில் 4,05,472(96.70%) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தாண்டு அரசுப் பள்ளிகள் 91.94 சதவிகிதமும், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 95.71 சதவிகிதம், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.88 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களை விட 3.54 சதவிகிதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள் 10,049 பேர்.
மாணவர்கள் https://tnresults.nic.in/ https://results.digilocker.gov.in/ என்ற இணையதள முகவரிகளில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.