புதுடெல்லி:இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான (இஸ்ரோ), செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் மங்கள்யான் திட்டத்தை நிறைவேற்றியது.
சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் சந்திரயான்-1, சந்திரயான்-2 திட்டங்களையும் மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து, வெள்ளி கிரகத்தின் மீது இஸ்ரோவின் பார்வை பதிந்துள்ளது. வெள்ளி கிரகத்தை ஆராய்ச்சி செய்ய விண்கலம் அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசுகையில், ”வெள்ளி கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்புவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் 2024ம் ஆண்டு டிசம்பரில் விண்கலம் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.
Leave a Reply