தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 30-ந்தேதி ஜெர்மனி செல்கிறார்.30-ந் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனி புறப்படுகிறார்.
தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.சிங்கப்பூர் பயணம் என பல்வேறு முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தில் தமிழகத்தில் தொழில் மாநாடு நடத்தினர்,இந்தநிலையில் வருகிற 30-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி செல்கிறார். அவரது பயண விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தில் 30-ந் தேதி காலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனி புறப்படுகிறார். 31-ந் தேதி அங்கு ஜெர்மனி அயலக அணி நிர்வாகிகளை சந்திக்கிறார். அதனை தொடர்ந்து செப்டம்பர் 1-ந் தேதி ஜெர்மனியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்று அங்கு 2 அல்லது 3-ந் தேதியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், தொழில் முனைவோ-ரை சந்தித்து உரையாடுகிறார்.
அதனை தொடர்ந்து 4-ந் தேதியன்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நல வாரியத்துடனான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.இதையடுத்து 6-ந் தேதியில் லண்டனில் உள்ள தமிழர் நல வாரியத்தின் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.இதனை முடித்து கொண்டு 7-ந் தேதி மாலை அங்கிருந்து புறப்படுகிறார். செப்டம்பர் 8-ந் தேதி அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார்.