நிரம்பியது பில்லூர் அணை: 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு..!!

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணை, 97 அடியை எட்டியதால் நிரம்பி வழிகிறது. அணைக்கு வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

அணையில் இருந்து, 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது