கோவையில் 655 பட்டாசு கடைகளுக்கு அனுமதி..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகர் பகுதியில் 355 பட்டாசு கடைகளும், புறநகர் பகுதியில் 300 கடைகளும் என மொத்தம் 655 பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போலீசார், தீயணைப்பு துறை ,மாவட்ட நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகளை கடைபிடித்து பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.