நெஞ்சு வலியால் மயங்கிய பயணி… நடுவழியில் இறக்கி விட்ட அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்..!

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த 40 வயது பயணி ஒருவர் அரசு பஸ்சில் (1 சி) பயணம் செய்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு சிறிது நேரத்தில் பஸ்சினுள் மயங்கி விழுந்தார். இதையடுத்து கண்டக்டர் அந்த பயணியை நடுவழியில் இறக்கி சாலையோரம் படுக்க வைத்து விட்டு பஸ் புறப்பட்டு சென்றது . இதுகுறித்து பஸ்சில் பயணம் செய்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த கலெக்டர் பவன் குமார் உத்தரவிட்டார். அதன் பெயரில் போக்குவரத்து கழக அதிகாரிகள் பணியை நடுவழியில் இறக்கி விட்டது தொடர்பாக கண்டக்டர் சரவணன் டிரைவர் ஈசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தனர்..