உதகை மே 2
நீலகிரி மாவட்ட உதகை லவ்டேல் பகுதியில் உள்ள லாரன்ஸ் பள்ளியின் நிறுவனர் தின விழாவில் மாணவர்களின் குதிரை சவாரி கலை நிகழ்வு ரசிகர்களை வசீகரித்தது
ஊட்டி,ஏப்ரல்30,
லாரன்ஸ் பள்ளியின் ஆண்டு விழா மற்றும் நிறுவனர் தின விழா,
ஏப்ரல் 30முதல் மே 2 வரை சிறப்பாக நடைபெற்றது, விழா நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்களின் சிறப்புமிக்க ஒரு முக்கிய நெகிழ்ச்சியான குதிரை சவாரி கலை நிகழ்வு பெற்றோர்களும் முன்னாள் மாணவர்களும் பெரிதும் வரவேற்ற நிகழ்வாக அமைந்தது,
ஐந்தாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்று தங்கள் திறமைகளை அரங்கேற்றினர், குதிரையின் மீது நின்று உடற்பயிற்சி செய்தல், புத்தகம் வாசித்தல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் போன்ற பல்வேறு சாகசங்களை மாணவர்கள் தைரியத்துடனும் நேர்த்தியுடனும் செய்துகாட்டினர்.
பள்ளியின் திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வை காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பெற்றோர்கள், பழைய மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் பார்வையிட்டனர், மாணவர்களின் கவனம், ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி குறித்து பார்வையாளர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்,
இந்த நிகழ்ச்சி பள்ளி மாணவர்களின் நுண்ணறிவு, ஒழுக்கம் மற்றும் உடல்-மனவலிமையை வெளிக்காட்டும் சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
முன்னதாக பள்ளியின் கலையரங்கில் இயல்,இசை,நாடகம் என பல்வேறு கலைநிகழச்சிகள் மற்றும் அந்திசாயும் வேளையில் பள்ளியின் உடற்கல்வித்துறையின் சார்பில் நடந்த கராத்தே மற்றும் நடனம்,உடற்கல்வி குறித்த நடனம் போன்றவை காண்போரை வியப்பில் ஆழ்த்தியது, லாரன்ஸ் பள்ளியின் ஆண்டு விழா மற்றும் நிறுவனர் தின விழா நிகழ்ச்சியை முன்னிட்டு, சிறப்பு விருந்தினர்கள், அரசுத் துறையின் உயரதிகாரிகள், பள்ளியில் பயிற்சிக்கும் மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள், நீலகிரி மாவட்ட அரசுத்துறை மற்றும் அரசியல் துறை விருந்தினர்கள் என பலர் பங்கேற்று லாரன்ஸ் பள்ளி மாணவர்களின் ஒழுக்கம் நுண்ணறிவு உடல் மனவலிமையை வெளிக்காட்டும் விதமாக சிறந்த முறையில் நிகழ்த்திய அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்து பங்கேற்ற அனைவரும் பள்ளியின் தாளாளர் மற்றும் பள்ளியின் முதன்மை ஆசிரியர், பள்ளியின் நிர்வாகிகளையும் பாராட்டி பள்ளி மாணவர்களை வாழ்த்து சென்றனர்,