கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜோதிபுரம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் ரோகித் குமார் (வயது 23) திருப்பூர் மாவட்டம் அவினாசி, ரங்கா நகரை சேர்ந்தவர் அருளானந்தம் (வயது 28)இவர்கள் இருவரும் பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். நேற்று வேலை செய்வதற்காக கோவை -மேட்டுப்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை ரோஹித் குமார் ஓட்டினார் .அருளானந்தம் பின்னால் இருந்தார். மத்தம்பாளையம் பிரிக்கால் தொழிற்சாலை அருகே சென்ற போது திடீரென்று நிலைதடுமாறி ரோட்டில் உள்ள சென்ட்ரல் மீடியினில் (தடுப்பு சுவரில்) பைக் மோதியது .இதில் இருவரும் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார்கள். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தாமோதரன் சம்பவத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் .மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Leave a Reply