தமிழக அரசியலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அணி பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.முறையான கூட்டணி முடிவுகள் எட்டப்படாததால், ஓ.பி.எஸ் கூடாரம் கிட்டத்தட்ட காலியாகி வரும் சூழலில், அவருடன் இருக்கும் ஒருசில முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் தற்போது மாற்றுப்பாதையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே தி.மு.க-வில் இணைவதற்காக வைத்திலிங்கம் மூலமாக நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது வெல்லமண்டி நடராஜனின் கவனம் புதிய திசையை நோக்கித் திரும்பியுள்ளது.சமீபத்திய தகவல்களின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடன் வெல்லமண்டி நடராஜன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஓ.பி.எஸ் அணியில் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதை உணர்ந்தே அவர் இந்த அதிரடி முடிவை நோக்கி நகர்வதாகக் கருதப்படுகிறது. ஒருவேளை இந்தப் பேச்சுவார்த்தை கைகூடும் பட்சத்தில், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஓ.பி.எஸ் அணிக்கு இது ஈடு செய்ய முடியாத பேரிடியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
எஸ்கேப் ஆகும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்..!







