முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடிய ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தரப்பு..!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக விசாரணைக்கு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் இன்று நேரில் ஆஜராக ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சம்மன் அனுப்பபட்டுள் நிலையில், அவர்கள் ஓபிஎஸ் காவல்நிலையத்தில் ஆஜராகாமல், நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி நடைப்பெற்ற கலவரம் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கலவரம் நடந்த தினத்தில் கிடைத்த வீடியோ ஆதாரங்களை அடிப்படையாக வைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 15 மேற்பட்டோர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டு இன்று ஆஜராக வேண்டும் என்று இராயப்பேட்டை போலீசார் தெரிவித்தனர்.

தஞ்சை ஒரத்தநாடு மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இன்று நேரில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டிருந்தது. காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானால் கைது நடவடிக்கை எடுக்கலாம் என்று அச்சத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.