புதுடெல்லி: “ஆபரேஷன் சிந்தூர் இந்திய ஆயுத படைகளின் தாக்குதல் திறனின் வௌிப்பாடு” என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள நார்த் பிளாக்கில் புதிய பன்னோக்கு முகமை மையத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அமித் ஷா, “பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியான அரசியல் விருப்பம். மேலும், இந்தியாவின் துல்லியமான உளவுத்துறை மற்றும் முப்படைகளின் ஒப்பிட முடியாத தாக்குதல் திறனின் தனித்துவமான சிறந்த வௌிப்பாடு” என பெருமிதத்துடன் கூறினார்.