கோவை அவிநாசி ரோடு புதிய மேம்பாலம் திறப்பு..!

கோவை அவிநாசி ரோடு புதிய மேம்பாலம் திறப்பு. உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் கடும் போக்குவரத்து நெரிசல் .வாகன ஓட்டிகள் அவதி.கோவை அக்டோபர். 11 கோவை -அவிநாசி ரோட்டில் புதிய மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதால் உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அவிநாசி சாலை பழைய மேம்பாலம் மற்றும் அதன் கீழ் பகுதியில் உள்ள சுரங்கப் பாதை வழியாக வரும் அனைத்து வாகனங்களும் கலெக்டர் அலுவலகம் மற்றும் ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு செல்ல உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் திரும்புவதாலும்,அதே நேரத்தில் புதிதாக திறக்கப்பட்டஅவிநாசி சாலை மேம்பாலத்தில் வந்த வாகனங்கள் உப்பிலிபாளையம்பாளையம் பகுதியில் இறங்கி ரவுண்டானா பகுதிக்கு வருவதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதன் காரணமாக புதிய மேம்பாலத்தில் வரும் வாகனங்கள்உப்பிலிபாளையம் வரை செல்ல அனுமதிக்கப்படவில்லை .அவை அனைத்தும் அண்ணா சிலை அருகே உள்ள இறங்கு தளத்தில் இறங்கி செல்ல அனுமதிக்கப்பட்டது. அத்துடன் உப்பிபாளையம் பகுதிக்கு வாகனங்கள் செல்லாமல் இருக்க மேம்பாலத்தில் தற்காலிகமாக தடுப்புக்கள் வைத்து அடைக்கப்பட்டன. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டுகள் வலியுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் ரவுண்டான பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க கோவை மாநகர போக்குவரத்து போலீஸ்துணை கமிஷனர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர் இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- புதிதாக திறக்கப்பட்ட அவினாசி சாலை மேம்பாலத்தில் வானங்கள் இறங்கும் பகுதியான உட்பிலிபாளையம் ரவுண்டாவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறோம் .அதன் பின்னர் போக்குவரத்து நெரிசலை தடுக்க மாற்றுஏற்பாடுகள் செய்யப்படும். பொதுவாக புதிதாக திறக்கப்பட்டமேம்பாலத்தில் செல்லும்போது அதிவேகத்தில் செல்வது வழக்கம். இதனால் விபத்துக்கள் ஏற்படும். எனவே அனைத்து வாகனங்களும் இந்த மேம்பாலத்தில் 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். அத வேகத்தில் செல்லக்கூடாது .அது போன்று வாகனங்களை மேம்பாலத்தில் நிறுத்தி செல்பி மற்றும் ரீல்ஸ் எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி யாராவது செல்பி மற்றும் ரீல்ஸ் எடுப்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை கண்காணிக்க போக்குவரத்து போலீசார் அவ்வப்போது மேம்பாலத்தில் ரோந்து சுற்றி வருகிறார்கள். எனவே வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும் வாகன ஓட்டிகள் மேம்பாலத்தில் மெதுவாக சென்று விபத்துகள் நடப்பதை தடுக்க போலீசருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்..