கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட் இஞ்சிபாறை எஸ்டேட்டில், காளீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார்.
மெக்கானிக் பணி முடிந்து நேற்று, பேருந்தை விட்டு இறங்கி, வீட்டுக்கு செல்லும்போது, தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த கரடி ஒன்று, அவரை துரத்தி, தலையில் தாக்கியது. படுகாயம் அடைந்த அவரை, உடன் வந்தவர்கள் கரடியிடம் மீட்டனர். ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி செய்யப்பட்டது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், காயம் அடைந்த வருக்கு ஆறுதல் கூறி, அவருக்கு முதலுதவி செய்வதற்கான முன்பணமாக பத்தாயிரம் ரூபாய் வனவர் முத்துமாணிக்கம் வழங்கினார். அவரை மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இஞ்சிபாறை பகுதியில் ஏராளமான கரடிகள் சுற்றித் திரிவதால், அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் .
கரடி தாக்கியதில் ஒருவர் படுகாயம்..
