கோவை மே 3 கோவை காந்திபுரம் அரசு விரைவு பேருந்து நிலையம் முன் நேற்று ரோட்டில் நடந்து சென்ற ஒருவர் மீது அரசு பஸ் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். விசாரணையில் அவர் கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள ஒலவக்கோடு மலம்புழா ரோட்டைசேர்ந்த சாய் ஜோசி (வயது 45) என்பது தெரியவந்தது .இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஸ் நிலையத்தில்அரசு பஸ் மோதி ஒருவர் உயிரிழப்பு.
