கோவை ரத்தினபுரி நால்வர் லே-அவுட் ,சம்பந்தர் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 60) குடிப்பழக்கம் உடையவர் இவர் நேற்று ரத்தினபுரி அமரர் ஜீவானந்தம் ரோட்டில் உள்ளஒரு டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் இளங்கோவன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.குடிபோதையில் விழுந்ததில் அவரது தலையின் பின் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது .இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
ஓவர் குடியால் ஒருவர் பலி..
