வால்பாறையில் தமிழக முதல்வர் பிறந்தளை முன்னிட்டு 21 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வரின் 72 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை நகரக்கழகத்தின் சார்பாக நகரகழக செயலாளர் செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் அதேபோல வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டு சின்கோனா பகுதியில் உள்ள கந்தன்குடி மற்றும் தேசிங்குகுடி ஆகிய இரண்டு ஆதிவாசி பழங்குடியினர் கிராமத்தில் வசிக்கும் சுமார் 45 குடும்பத்தினருக்கு டார்ச் லைட், குடை மற்றும் பரிசுப்பொருள் உள்ளிட்ட தொகுப்புகளை நகரக்கழகத்தின் சார்பாக அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரி வழங்கினார் வால்பாறை நகரச்செயலாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திமுகவின் மாவட்ட, நகர, சார்பு அணி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்