கோவை பாலக்காடு ரோடு குனியமுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சுகுணாபுரம் சோதனை சாவடியில் கண்காணிப்பு கேமரா மையம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது இதன்தொடக்க விழா நிகழ்ச்சியில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர்பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கேமராக்களை இயக்கி வைத்தார்.சுகுணா புரத்தில் இருந்து பிள்ளையார் புரம் , பி. கே புதூர் வரையிலும் 25 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில்போலீஸ் துணை கமிஷனர் சண்முகம்,உதவி கமிஷனர் ரகுபதிராஜா, ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் ராமச்சந்திரன், குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் போலீசார் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:- வெளிநாடுகளில் அல்லது வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு வருகை தருபவர்கள் நிம்மதியாக, திருப்தியாக திரும்பிச் செல்ல வேண்டும். தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இன்னும் ஒரு சில பகுதிகளில் புதிதாக வருபவர்கள்நடமாட முடியாத அளவுக்கு வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகின்றன. புகழ் பெற்று வளர்ந்து வந்து கொண்டிருக்கும் பாரிஸ் நகரில் கூட இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது ஆனால் கோவையை பொறுத்த அளவுக்கு கோவைக்கு வருபவர்கள் நமது நகரின் பெருமை பற்றி தான் கூற வேண்டும். அவர்களின் திருப்திக்காகவும் தொழில் செய்பவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மட்டுமே இத்தகைய கேமராக்கள் அமைக்கப்பட்டது. இன்னும் நீங்கள் அனைவரும் நட்பு வட்டாரங்களில் சொல்லி புதிது புதிதாக அனைத்து பகுதிகளிலும் கேமராக்கள் நிறுவ வேண்டும் .அவ்வாறு ஏற்பட்டால் மட்டுமே சட்டம்’ ஒழுங்கு சீர்குலையாமல்,குற்றங்கள் நடைபெறாமல், பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியும்.கோவையில் கடந்த 2 மாதங்களில் மட்டுமே 825 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது தற்போது இந்த பகுதியில் ஒரு சில தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளின் ஒத்துழைப்பு மூலம் 25 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன இதன் மூலம் குற்றங்கள் நடைபெறாமலும் ,சட்ட ஒழுங்கு சீர்கெடாமலும் இருக்கும். இவர் அவர்பேசினார்.
கோவையில் 2 மாதங்களில் 825 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம் .போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தகவல் …
