பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

காலமுறை ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 16,500 ரூபாய், அலுவலக உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் என்ற அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பத்தாண்டு பணி முடிந்த தகுதியுள்ள பணியாளர்களை 50% சேர்க்க வேண்டும்.

அங்கன்வாடிக்கு கோடை விடுமுறை தற்காலிக பணி நீக்க காலத்தில் பிழைப்பூதியம், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி, தேசிய மருத்துவ காப்பீடு மகப்பேறு விடுப்பு 12 மாதம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
3 வது நாளாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு,500 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள், அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்கள் எழுப்பினர்.மீண்டும் தேர்தல் அறிக்கை கொடுத்தால், தி.மு.க அரசை நம்பமாட்டோம் என்று சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் தெரிவித்தனர்.தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சாலை மறியலில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.








