காபூல்: தாடி வைக்காத அரசு ஊழியர்களின் அரசு பணி பறிக்கப்படும் என தாலிபான்கள் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பு பல்வேறு பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகளை விதித்து மக்களை ஆள்கிறது.முன்னதாக பெண்களுக்கு ஆப்கனில் கல்வி மறுக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது அரசு ஊழியர்கள் தாலிபான் உத்தரவுபடி பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும் என கூறியுள்ளது.இதன்படி ஆண்கள் பைஜாமா, ஜிப்பா உடன் தலையில் இஸ்லாமிய டர்பன் அணியவேண்டும். மேலும் தங்களது தாடியை சவரம் செய்யக்கூடாது. இந்த கட்டுப்பாடுகளை மீறினால் அவர்களது அரசுப்பணி பறிக்கப்படும் என கூறியது.தாடி வளர்க்காமல் சவரம் செய்து வருபவர்கள் அரசு அலுவலகங்களில் அனுமதிக்கப்பட மாட்டார் என்று தாலிபான் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளனர்.
Leave a Reply