இனி எந்த வங்கிகளும் கஸ்டமர்களிடம் கெத்து காட்ட முடியாது..

செல்போன் நெட்வொர்க் பிடிக்கவில்லை என்றால் ‘போர்ட்டபிலிட்டி’ (Portability) செய்வது போல, இனி உங்கள் வங்கி கணக்கையும் பிடித்தமான வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம்!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது ‘பேமெண்ட்ஸ் விஷன் 2028’ திட்டத்தின் கீழ், ‘PaSS’ (Payments Switching Service) என்ற புதிய முறையைக் கொண்டு வருகிறது.

இதன் மூலம், உங்கள் பழைய வங்கி கணக்கு எண் மாறாமலேயே, ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு கணக்கை மாற்றிக்கொள்ள முடியும். இனி சேவை சரியில்லாத வங்கிகளிடம் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை; ஒரே கிளிக்கில் வங்கியை மாற்றும் அதிகாரம் வாடிக்கையாளர் கைக்கு வரப்போகிறது.

​இந்த அதிரடி மாற்றத்தோடு சேர்த்து, செக் புக் (Check Book) முறையிலும் புரட்சி வரப்போகிறது. காகித செக்குகளுக்குப் பதிலாக டிஜிட்டல் முறையில் ‘இ-செக்’ (e-cheque) அறிமுகமாக உள்ளது. இதனால் செக் புக் தீர்ந்துவிடுமே என்கிற கவலை இனி இருக்காது. மேலும், வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும் நடைமுறைகளும் மிக எளிமையாக்கப்பட உள்ளன.

வங்கிகளின் ஏகபோக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, வாடிக்கையாளர்களுக்கு ராஜ மரியாதை கொடுக்கும் வகையில் ஆர்பிஐ இந்த மெகா பிளானை தீட்டியுள்ளது. கடன் பாக்கிகள் இருந்தால் மட்டுமே வங்கி மாறுவதில் சிக்கல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.