டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று தலைநகர் டெல்லியில் 10வது நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதன்முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
கடந்த காலங்களில் மத்திய திட்டக்குழு என்று செயல்பட்டு வந்த நிதிக்குழு, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததும், கடந்த 2015ம் ஆண்டு, திட்டக்குழு கலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. நிதிஆயோக் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் தலைவராக பிரதமர் நரேந்திரமோடி செயல்பட்டு வருகிறார்.
நிதி ஆயோக் கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நடப்பு நிதி ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (மே 24) டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில்முனைவை அதிகரிப்பது, திறன் மேம்பாடு, தொடா்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, நாடு முழுவதும் பரவியுள்ள பலதரப்பட்ட வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட இருக்கிறது.
இந்த அழைப்பு ஏற்று, இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 23) டெல்லி சென்றார். கடந்த 3 ஆண்டு காலங்களில் நடைபெற்ற எந்தவொரு நிதிஆயோக் கூட்டத்திலும் கலந்துகொள்ளாத முதலல்வர், இந்த ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
நிதி ஆயோக் கூட்டம் இன்று காலை 9 மணியளவில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை விடுவிக்க பிரதமர் நரேந்திரமோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், பிற மாநில முதலமைச்சர்களும் தங்கள் மாநிலத்திற்கு தேவையான நிதியை கேட்க உள்ளதாக தெரிகிறது.
முன்னதாக தமிழ்நாட்டில் நடைபெற்ற டாஸ்மாக் ரூ.1000கோடி மதுபான ஊழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், முதல்வரின் டெல்லி பயணம் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. டாஸ்மாக் தொடர்பான அமலாக்கத்துறை சோதனையின்போது, ல் டாஸ்மாக் எம்.டி. விசாகன் வீடு அருகே, கிழித்து எறியப்பட்ட பேப்பர்கள் கைப்பற்றப்பட்டன. அதில், உதயநிதியின் நண்பர்களான ரத்தீஷ், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோருடன் விசாகன் நடத்திய வாட்ஸ் ஆப் உரையாடல்களின் நகல்கள் கிழிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இது செர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே, முதல்வரின் டெல்லி பயணம் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. இததொடர்பாக எதிர்க்கட்சி எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
‘மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்’ என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் ஸ்டாலின், தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம். தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்!
அன்று, 2G-க்காக அப்பா டெல்லி சென்றார்; இன்று… டாஸ்மாக்… தியாகி… தம்பி. வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ? படுத்தே விட்டாரய்யா… எல்லாம் ‘தம்பி’ படுத்தும் பாடு’ என்று குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் கூட்டம்: 8 பிப்ரவரி 2015
இரண்டாவது கூட்டம்: 15 ஜூலை 2015
மூன்றாவது கூட்டம்: 23 ஏப்ரல் 2017
நான்காவது கூட்டம்: 17 ஜூன் 2018
ஐந்தாவது கூட்டம்: 15 ஜூன் 2019
ஆறாவது கூட்டம்: 20 பிப்ரவரி 2021
ஏழாவது கூட்டம்: 7 ஆகஸ்ட் 2022
எட்டுவது கூட்டம்: 27 மே 2023
ஒன்பதாவது கூட்டம் 27 ஜூலை 2024
இன்று 10வது கூட்டம் 24 மே 2025