பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுமித் குமார் பஸ்வான் ( வயது 19 )திருமணம் ஆகி 6 மாதம் ஆகிறது. இவர் புது சித்தாபுதூர், நந்தகோபால் வீதியில் மனைவியுடன் தங்கியிருந்து அங்குள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். மனைவியும் அவருடன் வேலை செய்தார். நேற்று மனைவியை வேலைக்கு அனுப்பி விட்டு தாமதமாக வருவதாக கூறினார்.. நீண்ட நேரம் ஆகியும் வேலைக்கு வராததால் சந்தேகத்தின் பேரில் வந்து பார்த்தபோது கணவர் சுமித் குமார் பஸ்வான் மனைவியின் சுடிதார் துப்பட்டாவை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இவர் மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
திருமணம் ஆகி 6 மாதத்திலேயே தற்கொலை செய்து கொண்ட புது மாப்பிள்ளை..
