புது மாப்பிள்ளை தற்கொலை..

கோவை : சிங்காநல்லூர் வரதராஜபுரம் , கிருஷ்ணம்ம நாயக்கர் லேஅவுட்டைசெய்தவர் கோபால், இவரது மகன் மதன்குமார் ( வயது 23) கட்டிட தொழிலாளி.கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் ரஞ்சிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரது மனைவி வீட்டுக்கு சென்றார். அங்கு மனைவி குடும்பத்தாருடன் அவருக்கு தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வீட்டுக்கு வந்த மதன் குமார் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து அவரது தந்தை கோபால் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..