டிசம்பர் முதல் புது ரூல்ஸ்… ஆதார் கார்டு, கிரெடிட் கார்டு, சிம்கார்டு… முக்கிய மாற்றம் வரப்போகுது..!

தார் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் சிம் கார்டு ஆகியவற்றில் டிசம்பர் முதல் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆதார் கார்டு, சிம் கார்டு, கிரெடிட் கார்டு என இந்த மூன்றும் இல்லாதவர்களே இல்லை என்ற அளவுக்கு இந்தியாவில் கிட்டத்தட்ட அனைவரும் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய அரசு இந்த மூன்றிலும் சில மாற்றங்களை கொண்டு வர உள்ளது. அதன்படி, டிசம்பர் 1-ஆம் தேதி முதல் ஒடிபி உள்பட அனைத்து மெசேஜ்களையும் டிரேஸ் செய்யும் நடைமுறையை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வங்கிகள் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் உள்பட அனைத்துக்கும் இந்த விதி பொருந்தும் என்றும், இதன் மூலம் ஸ்பாம் மெசேஜ்களை கட்டுப்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வங்கிகள் வழங்கும் கிரெடிட் கார்டிலும் ஒரு புதிய அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, கிரெடிட் கார்டு மூலம் கிடைக்கும் பலன்கள், வெகுமதிகள் மாற்றப்படுகின்றன. யெஸ் வங்கியில் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், விமானங்கள் மற்றும் ஹோட்டலுக்கான வெகுமதியை பெறுவதற்கு வரம்பு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், எச்டிஎப்சி வங்கியின் கீழ் ரகலிகா என்ற கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஒரு வருடத்தில் ஒரு லட்ச ரூபாய் செலவு செய்தால் மட்டுமே சில சலுகைகள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. SBI, Axis வங்கி உள்ளிட்ட வங்கிகளும் தங்கள் கிரெடிட் கார்டு அமைப்புகளை டிசம்பர் முதல் மாற்றம் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், ஆதார் கார்டு பெற்று 10 வருடங்களுக்கு மேல் ஆனவர்கள் அவர்களுடைய பெயர், முகவரி உள்ளிட்ட சில விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கடைசி தேதி டிசம்பர் 14 என்றும், டிசம்பர் 14ஆம் தேதி வரை ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக திருத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், கட்டணம் செலுத்தும் நிலை கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது.

எனவே பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்றவர்கள் உடனடியாக தங்களுடைய பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை அப்டேட் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.