கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு நாடு முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள். இந்த கோவில் துணை ஆணையராக இருந்த செந்தில் குமார் திருவாரூருக்கு இணை ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டார் . இதையடுத்து இந்து அறநிலைய துறையில் கோவை மாவட்ட நகை சரிபார்ப்பு துணை ஆணையராக இருந்த விமலா மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மருதமலை கோவிலில் புதிய துணை ஆணையர் பொறுப்பேற்பு!







