கூகுளுக்கு சவால் விட்டு மாஸ் காட்டும் புதிய காமட்.!!

புதுடெல்லி: நெட்டிசன்கள் தகவல்களை தேடுவதற்கு முந்தைய காலத்தில் குரோம் இண்டர்நெட், மொசில்லா பயர்பாக்ஸை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில், குரோம், கூகுள் அறிமுகம் செய்யப்பட்டதையடுத்து உலகின் தேடு பொறியில் இன்று வரை அந்த பிரவுசர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

ஆனால், சுந்தர்பிச்சையின் கூகுளின் ஆதிக்கம் விரைவில் முடிவுக்கு வரும் என்று தற்போது நெட்டிசன்கள் வட்டாரத்தில் பேசத் தொடங்கிவிட்டனர். அதற்கு காரணம் இந்தியர் ஒருவர் கூகுளுக்கு சவால் அளிக்கும் வகையில் தேடு பொறி என்ஜினை ஏஐ அடிப்படையில் உருவாக்கியுள்ளதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

பெர்பிளக்சிட்டி படைப்பாற்றல் மிக்க ஏஐ நிறுவனம். இதன் நிறுவனர் இந்தியரான அர்விந்த் ஸ்ரீநிவாஸ். இவரது நிறுவனம், விரைவில் காமட் என்ற அதன் சொந்த பிரவுசரை வெளியிட உள்ளது. இது, கூகுளுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஏஐ அடிப்படையில் இயங்கும் காமட், ஆழ்ந்த ஆராய்ச்சி மற்றும் தானியங்கி பணிகளை அடிப்படையாகக் கொண்டு இயங்ககூடியது. எனவே இது, இண்டர்நெட் பிரவுசிங் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் என்று கூறப்படுகிறது.

பெர்பிளக்சிட்டி நிறுவனர் அர்விந்த் ஸ்ரீநிவாசனின் காமட் பிரவுசரை உருவாக்கும் திட்டத்தில், என்விடியா, சாப்ட்பேங், அமேசான் நிறுவனர் ஜெப்பெசோஸ், ஓபன் ஏஐ, மெட்டாவின் யான் லிகுன் போன்றவர்கள் பெரும் நம்பிக்கை வைத்து முதலீட்டை வாரி இறைத்துள்ளனர்.

இவரது பெர்பிளக்சிட்டி நிறுவனம் ரூ. 4,400 கோடி நிதி திரட்டியதையடுத்து, அதன் ஸ்டார்ட்அப் மதிப்பு விரைவில் 14 பில்லியன் டாலரை அதாவது ரூ.1.2 லட்சம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.