உதகையில் நெட்வொர்க்கர்ஸ் வெல்பர் அசோசியேஷன் உரிமையாளர்களின் கூட்டம்

நெட்வொர்க்கர்ஸ் வெல்பேர் அசோசியேஷன் சார்பாக செயற்குழு கூட்டம் நீலகிரி மாவட்ட உதகை ஏடிசி தென்றல் உணவக விடுதியில் எம் மனோகரன் நிர்வாக தலைவர் தலைமை தாங்கினார், நீலகிரி மாவட்ட தலைவர் கே மணிகண்டன் , செயலாளர் ராஜேந்திரன், உயர்மட்ட குழு தலைவர், கே ராமச்சந்திரன், தியாகு ஆகியோர் முன்னிலையில் செயற்குழு கூட்டம் துவங்கியது கூட்டத்தில் எம் மனோகரன் நிறுவாண தலைவர் சிறப்புரையாற்றி கூட்டத்திற்கு வருகை புரிந்த நெட்வொர்க்கர்ஸ் வெல்பர் அசோசியேஷனில் பணிபுரியவர்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கினார், மற்றும் நடைபெற்ற கூட்டத்தில்2026 சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு நமது ஓட்டு அளிக்கப்படுவதை குறித்தான விளக்கத்தை தலைவர் எம். மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கை நெட்வொர்க்கர்ஸ் வெல்பர் அசோசியேஷன் உள்ள பல்வேறு கோரிக்கைகளை ஏற்பவர்களுக்கு வாக்களிக்கப்படுவது இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் மோசடி நிதி நிறுவனங்களிடம் ஏமாந்துநிற்கும் அப்பாவி மக்கள் இழந்த பணத்தை திரும்பப் பெறவும், போலி நிதிநிறுவனங்களை ஒழிக்கவும், தொழிலிக்கு பாதுகாப்பு ஏற்படும்
வகையிலும், ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் ஆணையம் அமைத்து,உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி கூறி, தேர்தல் அறிக்கையில்வெளியிடும் கட்சிக்கு அசோசியேசன் ஆதரவு அளிக்கும். நேரடி விற்பனை என்கிற நமது தொழிலுக்கு கேரள அரசு அங்கீகாரமும், பாதுகாப்பும்
வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது. கேரள அரசு இயற்றிய சட்டத்தை போல தமிழகத்திலும் சட்டத்தை இயற்றுவோம் என்று கூறுகின்ற அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்றும், நேரடி விற்பனை என்கின்ற எம்.எல்.எம். இண்டஸ்ட்ரியை அங்கீகரிக்கவும், தனி சட்டம் இயற்றவும், தனி
அமைச்சகம் ஏற்படுத்தவும், தனி வாரியம் அமைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கவும், சட்ட பாதுகாப்பு வழங்கவும் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம், மேலும் நெட் ஒர்க்கர்ஸ் வெல்பேர் அசோசியேசனில் இந்தியா முழுதும் சுமார் 50 லட்சம்
உறுப்பினர்கள் 16 ஆண்டுகளாக தொடர்பில் உள்ளனர், மத்திய மாநில அரசுகளின் அனைத்து அங்கீகாரங்களையும் பெற்று, டி.டி.எஸ் ஜி.எஸ்.டி. போன்ற வரிகளை செலுத்தி வருகின்ற நேரடி
விற்பனை என்கிற எம்.எல். எம். தொழில் செய்து வருகின்ற நிறுவனங்கள்மூலம் இந்தியா முழுவதும் சுமார் 5 கோடி பேர் முழு நேரமும், சுமார் 12 கோடி பேர் பகுதி நேரமும் வேலை வாய்ப்பு பெற்று உள்ளார்கள். நடைபெற்ற நெட்வொர்க்கர்ஸ் வெல்பர் அசோசியேஷன் கூட்டத்திற்கு நீலகிரி மாவட்ட தலைவர் கே மணிகண்டன், செயலாளர், உயர்மட்ட குழு தலைவர் ராமச்சந்திரன், தியாகு, ராஜேஷ், மற்றும் நிர்வாகிகள், அகில இந்தியா நெட்வொர்க்கர்ஸ் வெல்பர் அசோசியேஷன் மத்திய மாநிலத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர், மற்றும் கோவை நீலகிரி குன்னூர் கோத்தகிரி கூடலூர் போன்ற பகுதியிலிருந்து நெட்வொர்க்கர்ஸ் வெல்பேர்ஸ் அசோசியேஷன் உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்த ஆலோசனை பெற்று சென்றனர் விழா நிறைவாக அனைவருக்கும் மதிய உணவு வழங்கி சிறப்பித்தனர்