சொத்து தகராறில் அண்ணனை வெட்டி படுகொலை செய்த வழக்கில் தம்பிக்கு ஆயுள் தண்டனை.

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள கீழ முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார்.இவர் தனது தந்தையின் சொத்தில் அண்ணன் பெருமாளிடம் பங்கு கேட்டு தராததால் சொத்தில் பங்கு தராத அண்ணனை கடந்த 2024 ஆம் ஆண்டு மண்வெட்டியால் வெட்டி படுகொலை செய்துள்ளார்.கொலை சம்பந்தமாக வருசநாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை முடிவுற்று அய்யனார் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு மாத கால மெய்க்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி சொர்ணம் ஜே நடராஜன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.அந்த தீர்ப்பினை தொடர்ந்து குற்றவாளியை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.