கோவை மே 7
கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாய்க்கன்பாளையம், சபரிகார்டனை சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி. இவருடைய மனைவி சரண்யா ( வயது 26)இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சரண்யா கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சரண்யா தனது 3 வயது குழந்தையுடன் எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் “ஸ்விட்ச் ஆப் ” செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கணவர் தீபன் சக்கரவர்த்தி துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.