அமைச்சர் சேகர் பாபுவின் உடன் பிறந்த சகோதரர் தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை..

சென்னை : தமிழக இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபுவின் உடன் பிறந்த அண்ணன் தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2001 மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தலில் ஆர்கேநகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சேகர்பாபு 2011 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் தற்போது தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கிறார்.

அவரது சகோதரரான தேவராஜ் சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று  அமைச்சர் சேகபாபுவின் அண்ணன் தேவராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் தேவராஜின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் நாளை உடற்கூறு ஆய்வுக்குப் பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது