தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அத்துறைக்கான அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
அதன்படி,பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.அந்த வகையில்,முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட் திட்டத்தின் மூலம் 3,000 பம்பு செட்டுகள் 70 சதவீத மானிய விலையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,செல்போன் மூலம் இருக்கும் இடத்தில் இருந்து பம்பு செட்டுகளை இயக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
குறிப்பாக,பம்பு செட்டுகளை இயக்க இரவு நேரங்களில் தோட்டத்திற்கு செல்லும் விவசாயிகள் பாம்பு கடித்து இறப்பதை தடுக்க தானியங்கி மூலமாகவோ அல்லது செல்போன் மூலமாகவோ இருக்கும் இடத்தில் இருந்து பம்பு செட்டுகளை இயக்கும் திட்டம் ரூ.5 கோடியில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும்,விதை முதல் விற்பனை வரை அறிய ‘செயலி’ உருவாக்கப்படும் என்றும் வேளாண் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
Leave a Reply