மெட்ரோ திட்டம் விவகாரத்தில், கோவை மாநகராட்சி கூட்டத்திற்கு வந்த தி.மு.க – அ.தி.மு.க கவுன்சிலர்கள் போட்டி ஆர்ப்பாட்டம் : மத்திய – மாநில அரசை மாறி, மாறி கண்டித்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு !
கோவை மாநகராட்சி கூட்டத்திற்கு தி.மு.க மற்றும் அ.தி.மு.க, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி கவுன்சிலர்கள் வந்தனர். அப்போது அ.தி.மு.க கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர், மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை தமிழக அரசு சரியாக தாக்கல் செய்யவில்லை என்று கூறி அதை கண்டித்து, கண்டன வாசகர்கள் அடங்கிய பதாகைகளுடன் மாநகராட்சி கூட்டத்திற்கு செல்லும் வழியில் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது தி.மு.க , காங்கிரஸ், கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பிய படி மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு சென்றனர்.தமிழக அரசு ஏராளமான திட்டங்களை கோவைக்கு அளித்து உள்ளது. கோவை மாவட்டத்தில் தி.மு.க விற்கு எம் .எல். ஏ . யாரும் இல்லை என்றாலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏராளமான திட்டங்களை கோவை மாவட்டத்திற்கு கொடுத்து வருகிறார்.ஆனால் மத்திய அரசு எதுவுமே செய்யாமல், உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறி வருகிறது என்று கூறி அதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
அ.தி.மு.க கவுன்சிலர் பிரபாகரன் கூறும்போது,கோவை மாவட்டத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2020 ஆம் ஆண்டு அப்போது அமைச்சராக இருந்த எஸ் .பி .வேலுமணி பரிந்துரையில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி திட்டத்தை அறிவித்து அதற்கு முதற்கட்டமாக 3 கோடி நிதி ஒதுக்கி இருந்தார். ஆனால் அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தி.மு.க அந்தத் திட்டத்தை தொடக்கி விட்டது என் புகார் கூறினார்.








