10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் மே 19இல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை இன்று சென்னை நுங்கம்பாக்கம் அரசு தேர்வுகள் இயக்ககத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 8,71,239 மாணாக்கர்கள் எழுதினர். இதில் 8,17,261 ( 93.80%) பேர் தேர்ச்சி அடைந்தனர். மாணவர்களை விட மாணவிகள் 4.14% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 91.74 சதவீதமாகவும், மாணவிகள் 95.88 சதவீதமாகவும் உள்ளது. கடந்த 2024 பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 91.55% . ஆனால் இந்த ஆண்டு தேர்ச்சி 2.25 சதவீதம் கூடுதலாக உள்ளது. 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 4,917 இதில் 100% பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 1,867 ஆக உள்ளது. தமிழ் மொழி பாடத்தில் சதம் அடித்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 8. அதிகபட்சமாக அறிவியல் பாடத்தில் 10838 மாணாக்கர்கள் சதம் அடித்துள்ளனர். ஆங்கிலத்தில் 346, ஆங்கிலம் 346, கணிதம் 1996, சமூக அறிவியல் 10,256 மாணாக்கர்கள் சதம் அடித்துள்ளனர்.
இந்நிலையில் 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் மே 19இல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விடைத்தாள் நகலைப் பெற பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம் என்றும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in இணையத்தில் மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.275 கட்டணமாக செலுத்தி விடைத்தாளின் நகல்களை பெறலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.