அலமேலு அக்கா சிரிப்பில் விழுந்த பல பிரபலங்கள்… எஸ்.ஐ.யையும் விட்டு வைக்கல…

சேலம்: யாரை பாதுகாப்பு என்று நம்பி சென்றாரோ, அவரே எமனாக மாறுவார் என்று அந்த போலீஸ் எஸ்.ஐ. நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டார்.பெண் வக்கீலின் சிரிப்பிலும், இனிக்கும் பேச்சிலும் விழுந்து, கடைசியில் அந்த பெண் வக்கீல் மீதே போலீசில் புகார் கொடுக்க ஓடியிருக்கிறார் எஸ்ஐ..

சேலம் மாவட்டம் பூசாரிபட்டியில் வசித்து வருபவர் அலமேலு.. 25 வயதாகிறது.. திருமணம் ஆகிவிட்டது.. இவருக்கு ஓமலூரை அடுத்த ஆர்.சி.செட்டிபட்டியை சேர்ந்த சகோதரர்களான ஜனார்த்தனன் (28) மற்றும் ஜனஅம்சபிரியன் (28) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இவர்கள் 3 பேரும் சேர்ந்து பணம் பறிக்கும் நோக்கில் திட்டம் தீட்டியுள்ளனர்.அதன்படி ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முக்கிய விஐபிகள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் செல்போன் நம்பர்களை சேகரித்துள்ளனர்.பிறகு அந்த நம்பர்களுக்கு அலமேலுவை தொடர்பு கொள்ள வைத்து, நட்பாக பேச வைத்து, அதன்மூலம் அவர்களிடம் எல்லாம் பழக்கம் ஏற்படுத்தியுள்ளனர். செல்போனில் தொடர்ந்து பேசுவதன் மூலம் நம்பிக்கை பெற்ற அலமேலு, அந்த நம்பிக்கையை வைத்தே பலரிடமிருந்து பணம் பெற துவங்கினார்..ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தை சொல்லி பணம் வாங்கி உள்ளார்.. ஒரு கட்டத்தில் அவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது, நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு அழைப்பாராம்..உடனே அலமேலுவின் பேச்சை நம்பி வந்த ஆண்களை வீட்டிற்குள் வரவழைத்து, சக கும்பல் உறுப்பினர்கள் சேர்ந்து அவர்களை கட்டிப்போட்டு, ஆடைகளை களைந்து ஆபாசமாக வீடியோ எடுத்துவிடுவார்களாம்.. அந்த வீடியோக்களை காட்டி, லட்சக்கணக்கில் பணம் தர வேண்டும் என்றும், பணம் தராவிட்டால் சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்றும் மிரட்டி பணம் பறித்துள்ளனர்.இப்படி கடந்த சில மாதங்களாகவே இந்த கும்பலின் சதி வலையில் பலர் சிக்கியதாக தெரிகிறது.. இவர்கள் எல்லாருமே பெரும் புள்ளிகள், பிரபலங்கள், விஐபிகள் ஆவர்.இதனால் அவமானத்தாலும், பயத்தாலும் போலீசுக்கு போகவில்லை.. மேலும் அலமேலு கேட்ட பணத்தையும் பலர் கொடுத்ததாகவும் தெரிகிறது..

அலமேலுவின் இந்த வலையில் கடைசியாக விழுந்தவர்தான் பூபதி… ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார்.. 32 வயதாகிறது.. ஆர்.சி.செட்டிபட்டி பகுதியை சேர்ந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக 2 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தபோதுதான் வக்கீல் அலமேலு இவருக்கு அறிமுகமாகி உள்ளார்.

கேஸ் விஷயமாக அடிக்கடி பேச வந்த அலமேலு, சில நாட்களிலேயே பூபதியிடம் நெருங்கி பழகி உள்ளார்.. வழக்கு செலவுக்கு அவசர தேவை என்று சொல்லி, பூபதியிடம் இருந்து 92,0000 ரூபாயை கடனாக அலமேலு வாங்கியுள்ளார். அதை பூபதி திரும்ப கேட்டபோதுதான் இருவருக்கும் தகராறு வெடித்துள்ளது.பணத்துக்கு பதிலாக புதிய செல்போன் ஒன்றை தருவதாக பூபதியிடம் அலமேலு சொன்னாராம்.. அந்த செல்போனை வீட்டுக்கு வந்து வாங்கி கொள்ளும்படி சொல்லவும், பூபதியும் சென்றுள்ளார்.. அப்போது பூபதியுடன் அலமேலு நெருங்கி பேசியிருக்கிறார்.. இருவரும் நீண்ட நேரம் தனிமையில் இருந்துள்ளனர்… இதை அலமேலுவின் ஆண் நண்பர்கள் ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.மேலும் பூபதி கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயின், 27,000 ஜிபே மூலம் பணம் பறித்து, பூபதியை அங்கிருந்து அடித்து விரட்டியிருக்கிறார்கள்.. இதற்கு பிறகுதான் போலீசுக்கு சென்றார் பூபதி. தன்னை போல இனி யாருமே அலமேலுவிடம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, தீவட்டிப்பட்டி போலீசில் அலமேலு மீது புகாரும் அளித்தார்.இதுபற்றி தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை, பணம் பறிப்பில் ஈடுபட்ட அலமேலு, அவரது கூட்டாளிகளான வீரவளவன் (எ) முருகேசன் (36), செல்லா (எ) செல்வம் (28), திருமால் அழகன் (21), பிரவீன்குமார் (23) ஆகிய 5 பேரை கைது செய்தனர். கைதான அலமேலு உள்ளிட்ட 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.ஓமலூர் காவல் சார்பு ஆய்வாளரை ஏமாற்றி, தாக்கி பணம் மற்றும் நகை பறித்த வழக்கில் கைதான அலமேலு என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே வீரவளவன், திருமால் அழகன் மற்றும் செல்வம் ஆகிய மூவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான அலமேலுவையும் அதே சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.முன்னதாக, மாவட்ட எஸ்பி கௌதம்கோயல் அளித்த பரிந்துரையை ஏற்று இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை, சேலம் பெண்கள் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலமேலுவிடம் அதிகாரிகளால் வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு பேர் இப்போது குண்டர் சட்டத்தின் கீழ் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.இதில் ஹைலைட் என்னவென்றால், அலமேலு, வக்கீல் இல்லையாம்.. அவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்திருக்கிறாராம்.