குப்பை கிடங்கில் பிணமாக கிடந்தவர் காதல் தகராறில் கொலை . நண்பர்கள் 4 பேர் இன்று கைது.

கோவை மே 14 கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் குப்பை கிடங்கியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டப்பட்டது .பின்னர் அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. அந்த பகுதியில் சிலர் தினமும் நடைப்பயிற்சி செய்து வருகிறார்கள் .இந்த நிலையில் கடந்த 11 – ந் தேதி காலையில் அங்கு சிலர் நடை பயிற்சி செய்தனர். அப்போது ஒரு வித துர்நாற்றம் வீசியது. உடனே அவர்கள் துர்நாற்றம் வீசியஇடத்துக்கு சென்று பார்த்த போது அங்கு கை – கால்கள் கட்டப்பட்ட நிலையில்ஒரு வாலிபர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போத்தனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் விரைந்து சென்றுஅந்த நபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் இறந்தவருக்கு 35 வயது இருக்கும்.அவரது வலது கையில் “அபர்ணா “என்று பச்சை குத்தப்பட்டுள்ளது.. அவரின் கை – கால்கள் கட்டப்பட்டு, நிலையில் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. மேலும் உடலில் தாக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்தது .எனவே மர்ம ஆசாமிகள்அந்தஅந்த வாலிபரை கொலை செய்து பிணத்தை வீசி சென்று இருப்பது தெரிய வந்தது இது குறித்த புகாரின் பேரில்போத்தனூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர். கொலையாளிகளை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் கனகசபாபதி தலைமையில் போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள்,போலீசார் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மதுரையைச் சேர்ந்த சூர்யா ( வயது 21 )என்பது தெரிய வந்தது.இது தொடர்பாக மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி (வயது 21) கோவை சுந்தராபுரம் நவீன் கார்த்திக் ( வயது 20 )கிணத்துக்கடவு மாதேஷ் ( வயது 21) போத்தனூர் முகமது ரபி (வயது 21) ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் கைது செய்யப்பட்ட கார்த்திக்கின் காதலியிடம் கொலை செய்யப்பட்டசூர்யா வீடியோகாலில் பேசினாராம். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் தனது நண்பர்களுடன் சேர்ந்துபேரூர் அருகே ஒரு வீட்டில் வைத்து சூர்யாவைமதுவில் போதை மாத்திரைகள் கலந்து கொடுத்தும்,மயக்க ஊசி செலுத்தியும் கொலை செய்துவிட்டு பிணத்தை வெள்ளலூர் குப்பை கிடங்கில் நண்பர்களுடன் சேர்ந்து கால் டாக்சியில் கடத்திச் சென்று வீசியது தெரியவந்தது.இவர்கள் 4 பேரும் இன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்