கோவை : திண்டுக்கல் மாவட்டம் சின்ன கலைய முத்தூர் , என். டி.நகரைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் ( வயது 40)இவர் கணபதி உடையாம்பாளையம் விவேகானந்தா ரோட்டில் உள்ள தனசேகர் என்பவரது வீட்டின் இரண்டாவது மாடியில் வாடகைக்கு குடியிருந்து வேலை செய்து வந்தார்..இந்த நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் தனசேகர் துடியலூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் குரு கணேஷ் சம்பவ இடத்துக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.அங்கு சௌந்தரராஜன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்திருப்பதாக தெரிகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம்..
