கோவை சாய்பாபா காலனி, ராமலிங்கம் காலனியில் உள்ள கிருஷ்ண கமலம் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் கதிர் சீனிவாசன். இவரது மனைவி ஜெயந்தி ( வயது 46 ) இவர்களது வீட்டில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பக்கம் உள்ள பட்டாளம் பட்டியை சேர்ந்த ஆனந்தன் மனைவி பொம்முத்தாய் (வயது 32) என்பவர் கடந்த 17 -9- 20 25 முதல் 18 – 10 – 2025 வீட்டு வேலை செய்து வந்தார். இந்த நேரத்தில் இவரது வீட்டிலிருந்த 9 பவுன் தங்க நகைகளை காணவில்லை. இது குறித்து ஜெயந்தி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்கு பதிவு செய்து பொன்னுத்தாயை நேற்று கைது செய்தனர். இவரிடமிருந்து 9 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வேலை செய்த வீட்டிலேயே 9 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது..!

 
		
 
				        





