கோளறுபதி நவக்கிரக கோட்டையில் மகா சிவராத்திரி பெருவிழா!

திருப்பூர் மாவட்டம் : பல்லடம் _உடுமலை ரோட்டில் உள்ள சித்தம்பலத்தில் கோளாறு பதி நவகிரக கோட்டை உள்ளது. இங்கு மகா சிவராத்திரி பெருவிழா நேற்று சிறப்பாக நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை முதற்கால வேள்வி மகா அபிஷேகம், மகாதீபாரதனை நடந்தது .இரவு 7:00 மணிக்கு சிவன் பார்வதி திருக்கல்யாண உற்சவமும்,, 9 மணிக்கு இரண்டாம் கால வேள்வி சிவபெருமான் மூல மந்திரம் வேள்வி, மகா அபிஷேகம், மகா தீபாரதனையும் நள்ளிரவு 12 மணிக்கு ஞானகுருவின் சத்சங்கம் ,மகா வேள்வி வழிபாடு மகா அபிஷேகம், மகாதீபாரதனை, 108 கலச அபிஷேகம், 108 பால்குடம் அபிஷேகம் நடந்தது. அதிகாலை 3:30 மணிக்கு மூன்றாம் கால வேள்வி மகா அபிஷேகமும் தீபாரதனையும், இன்று அதிகாலை 6:00 மணிக்கு நான்காம் கால வேல்வியும் சிவபெருமான் மகா வேள்வி மகாவிஷகம் அம்மையப்பர் திருமதி உலா மகா தேவாரதனை நடந்தது.கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் இரண்டாம் குரு மகா சன்னிதானங்கள் சாக்த ஸ்ரீ. பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் பக்த கோடிகளுக்கு அருளாசி வழங்கினார்.பரதநாட்டிய நிகழ்ச்சியும், இன்னிசை நிகழ்ச்சியும், நடைபெற்றது.பக்தர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோவில் வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் அமர்ந்திருந்து விடிய விடிய விரதம் மேற்கொண்டனர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது..