வால்பாறையில் மிலாது நபி விழா நபிகள் நாயகத்தின் வாழ்க்கை பாடல்களை பாடி அசத்திய மதரஸா மாணவர்கள்..!

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை எஹில்ஸ் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத்தில் மிலாது நபி விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. தாலுகா காஜியார் பி.டி .பூக்கோயத் தங்கள் தொடங்கி வைக்க முத்தவல்லி என்.கே.கமாலுதீன், முத்தனூர் தங்கள் செய்யிது சிகாபுதீன், கௌரவ தலைவர் வால்பாறை வீ.அமீது, ஜமாஅத் தலைவர் கே.எம்.குஞ்சாலி மற்றும் பொறுப்பாளர்கள் முன்னிலையில் சுப்ஹ் தொழுகைக்கு பின் மௌலுது நடைபெற்றது அதைத் தொடர்ந்து தப்ஃமுட்டு நிகழ்ச்சிகளுடன் முக்கிய நகர் பகுதி வழியாக ஊர்வலம் நடைபெற்றது ஊர்வலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து தஃப்ருக் என்ற மாபெரும் அன்னதானம் நடைபெற்றது இந்த அன்னதானத்தை கௌரவ தலைவர் வால்பாறை வீ.அமீது தொடங்கி வைத்து சிறப்பித்தார் இந்த அன்னதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்பு ஜமாஅத்தின் மதரஸா மாணவிகளின் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வெகுசிறப்பாக நடைபெற்ற இந்த மிலாதுநபி விழாவில் ஆனைமலை ஹில்ஸ் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகள், ஆனைமலை சுன்னத் ஜமாஅத் மதரஸா மாணவ மாணவிகள் மற்றும் அனைவருக்கும் கலந்து கொண்டனர்..