கோவை பீளமேட்டில்,உள்ள வணிக வளாக ரோட்டில் தனியாருக்கு சொந்தமான “சியோன் பிளாசா ” பார் உள்ளது . இங்கு சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பீளமேடு காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்,சப் இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் ஆகியோர் அங்கு நேற்று காலையில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக பார் ஓனர் லட்சுமிபுரம் கார்த்திக் (வயது 43) பார் மேனேஜரான மேட்டுப்பாளையம் நாகராஜன் (வயது 29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 58 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..
கோவை தனியார் பாரில் மதுபாட்டில்கள் பறிமுதல் – ஓணர், மேனேஜர் கைது..!
