மதுரை முனி சாலை பகுதியை சேர்ந்தவர் முகமது பிர் தவ்ஸ் ராஜா (வயது 29 )இவர் கோவை அரசு மருத்துவமனையில் தற்காலிக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலும் இவர் பழைய காகிதங்களை சேர்த்து அதை விற்று மது குடித்து வந்தார். பிர் தவ்ஸ் ராஜாவுக்கும், 16 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது சிறுவனும் அவரும் சேர்ந்து ஒன்றாக மது குடித்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் சமையல் தொழிலாளி ரவி என்பவரும் இவர்களுடன் சேர்ந்து மது குடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 14- 11 – 2023 அன்று வாலாங்குளம் பகுதியில் 3 பேரும் மது குடித்தனர்.. அப்போது ரவியும் மது குடித்துள்ளார். அவரைபிர்தவ்ஸ் ராஜாவும், 16 வயது சிறுவனும் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளனர். அதற்கு ரவி .மறுத்தார்.அவரை வலுக்கட்டாயப் படுத்திய போது ரவி அவர்களை உதைத்து தள்ளினார். ஆத்திரமடைந்த பிர் தல்ஸ் ராஜாவும் சிறுவனும் சேர்ந்து கல்லை தூக்கிப்போட்டு சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.இது குறித்த ரேஸ்கோர்ஸ் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தன இதில் 16 வயத சிறுவன் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான். பிர்தவ்ஸ் ராஜா மீதான கொலை வழக்கு விசாரணை கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சசிரேகா குற்றம் சாட்டப்பட்ட பிர்தவ்ஸ் ராஜாவுக்கு ஆயுள் தண்டனையும் ரூ 5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.. சிறுவன் மீதான வழக்கு சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது சிறுவன் செங்கல்பட்டில் உள்ள சிறுவர்களுக்கான சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிர்தவுஸ்ராஜா கோவை சிறையில் அடைக்கப்பட்டார்..
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்தவர் கொலை – வாலிபருக்கு ஆயுள் தண்டனை.!!
