சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்து நொறுங்கியது!

90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல் காற்றில், சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்து நொறுங்கியது.

தெற்கு பிரேசில் குவாய்ப்பா நகரில், தனியாருக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடத்தில், 24 மீட்டர் உயரம் உள்ள சுதந்திர தேவி சிலை அமைக்கப்பட்டு இருந்தது. புயல் காரணமாக அந்நகரில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதில் சுதந்திர தேவி சிலை, தாக்குப் பிடிக்க முடியாமல் கீழே விழும் காட்சிகள் தான் இவை. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.