திருவாடானை அருகே உள்ள அச்சங்குடி ஊராட்சியில் திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் – முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் அறிவுறுத்தலின் படியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்- சார்பு நீதிபதி சரவண பாபு ஆலோசனையின் பேரிலும் திருவாடானை வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் தலைவர் அன்டோனி ரிஷந்தேவ் உத்தரவின் பேரில் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் வழக்கறிஞர் ஜெகன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் , பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சட்டம் சார்ந்த விழிப்புணர்வு உரையாற்றி இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சட்டவிழிப்புணர்வு சம்மந்தமான துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் இந்நிகழ்ச்சியில் பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை சட்டதன்னார்வலர் கோட்டைச்சாமி செய்திருந்தனர்.
அச்சங்குடி ஊராட்சியில் சட்ட விழிப்புணர்வு முகாம்.
