கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி, அமர்ஜோதி நகரை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 48) இவர் பொள்ளாச்சி – பல்லடம் ரோட்டில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார் . கடந்த 22- ஆம் தேதி யாரோ மர்ம ஆசாமிகள் இவரது ஸ்டுடியோவில் பூட்டை உடைத்து அங்கிருந்த 3 லேப்டாப் ,4கேமரா, 1 டிரோன் கேமரா ,வயர்லெஸ் மைக் ஆகியவற்றைதிருடி சென்று விட்டனர். இதுகுறித்து ஜானகிராமன் மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்டுடியோவில் பூட்டை உடைத்து லேப்டாப், கேமராக்கள் திருட்டு..!
