வெள்ளப்பெருக்கு காரணமாக 16 நாட்கள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி, நவம்பர் 7ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்த விடப்படுவதாக, வனத்துறை அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம், கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பொழிந்ததால், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, கடந்த 22 ஆம் தேதி முதல் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்தது.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை அளவு குறைந்து விட்டதாலும், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. நவம்பர் 7ஆம் தேதி முதல் பொதுமக்கள் சுற்றுலா வர, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா திறக்கப்படுவதாக, பூலுவாம்பட்டி வனச்சரக அலுவலர் தெரிவித்துள்ளார்.




