தேவைப்பட்டால் துப்பாக்கியை பயன்படுத்துவோம்! காவல் ஆணையர்!

குற்றவாளிகளிடம் தேவைப்பட்டால் காவல்துறை துப்பாக்கியை பயன்படுத்தும். அதற்கான சூழல் தான் அதை முடிவு செய்யும் என கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன்  தெரிவித்தார்.

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர் கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பான பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.வெளி மாவட்டங்களுக்கு செல்ல 7 பேருந்து நிலையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது என்றார் . வெளியூர் செல்ல மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறிய அவர், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உயர் கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. பிக்பாக்கெட்டுகள்  தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

புதன் வியாழன், வாரச்சந்தை போக்குவரத்து சரி செய்ய ஏற்பாடுகள் செய்து உள்ளோம் என்றார். 10 முக்கிய கோவில்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது .பதற்றமான 6 இடங்களை தேர்வு செய்து, கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பை  அதிகரித்து உள்ளதுடன், சாலை ஓரங்களில் மது அருந்துவார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். சைபர் குற்றங்களை எங்கிருந்தும்  நடத்தும்  நிலை உள்ளதாகவும், சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கடினம் என்றார். வெளிநாடு, வெளி மாநிலங்களில்  இருந்து தவறு செய்பவர்கள் மீது  சைபர் குற்ற வழக்குகளில் அதிகம் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றார்.

முதியவர் வங்கி கணக்கில் இருந்த 17 இலட்சம் கொள்ளை அடித்து உள்ளதாகவும், அவர்களை பிடிக்க தனிப்படை வெளி மாநிலம் சென்றது. ஒரு வழக்கில் 10 பேரை கைது செய்து தமிழ்நாடு அழைத்து வருவது இதுவே முதல் முறை என்றார். குஜராத் காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், தனிப்படை போலீசாருக்கு பாராட்டினார். 350 கிரெடிட் கார்டு பிடிக்கப்பட்டு உள்ளது என்றார். கடந்த ஆண்டில் 400க்கும்  மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி உள்ளோம். வரும் ஆண்டில் அதிகப்படியான  நடவடிக்கை எடுப்போம் என்றார்.

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தனிப்படை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். மிரட்டல் விடுபவர்கள் தமிழ்நாட்டில் இருப்பவர் தான் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் பிடித்து விடுவோம். காவல்துறைக்கு பொங்கல், தீபாவளி கிடையாது.அனைவரும் பணியில் உள்ளனர். ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். போதை தடுப்புக்கு  தனி பிரிவு உருவாக்க உள்ளோம். போதை நடமாட்டத்தை கண்டறிய வேண்டும். கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை, கடந்த 8 தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளோம். வழக்கு தேவையான ஆதாரங்கள் இணைக்கப்பட்டது.

 

குற்றவாளிகளிடம் தேவைப்பட்டால் காவல்துறை துப்பாக்கியை பயன்படுத்தும். அதற்கான சூழல் தான் அதை முடிவு செய்யும் என  கூறினார்.